குடியரசு தினத்தை முன்னிட்டு 201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

அரியலூர் ஜன.23: குடியரசு தினத்தை முன்னிட்டு 201 ஊராட்சிகளில் நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளார். மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் ஜன.26ம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் பின்வரும் பொருள்கள் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை. கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் வரும் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல். தொழிலாளர் வரவு-செலவு திட்டம்.

தொழிலாளர் வரவு-செலவு திட்ட பணிகள், நலிவு நிலை குறைப்பு நிதி, தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், ஜல் ஜீவன் திட்டம், சிறு பாசன ஏரிகள் புதுபித்தல், தொகுதி மேம்பாட்டுத்திட்டம், இதர பொருட்கள் குறித்தும் விவாதித்தல் எனவே, மேற்காணும் கிராம சபை கூட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

 

Related Stories: