சென்னை: பிளஸ்2 பொதுத் தேர்விற்கான தேர்வு எண்ணுடன் கூடிய பெயர்பட்டியல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இணை இயக்குநர், முதன்மை கல்வி அலுவலர்கள், அரசு தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: மார்ச் 2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ்2) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் விவரங்களடங்கிய பட்டியலில் மாணவர்களின் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள கடந்த 2025 அக்டோபர் 25ம் தேதி முதல் கடந்த 2ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.
தற்போது மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்ட மார்ச் 2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ்2) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் தேர்வு எண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலினை அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் நேற்று முதல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளமான dgeapp.tnschools.gov.inக்கு சென்று தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் பிளஸ்1 அரியர் பெயர் பட்டியலினை அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் நாளை முதல் அரசுத் தேர்வுகள் இயக்க இணையதளமான dgeapp.tnschools.gov.in க்கு சென்று தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ள இணை இயக்குநர் (கல்வி) புதுச்சேரி மற்றும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
