அயோத்தி: உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் மார்ச் 19ம் தேதி (இந்து புத்தாண்டு)சைத்ர சுக்ல பிரதிபதா சம்பத் 2083ஐ முன்னிட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மூ சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
விழாவில் கோயில் கட்டுமானத்தில் பணியாற்றிய 400 தொழிலாளர்களை குடியரசு தலைவர் கவுரவிப்பார் என்று அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையொட்டி கோயில் அறக்கட்டளை குழு டெல்லியில் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து விழாவில் கலந்து கொள்ளுமாறு முறையான அழைப்பு விடுத்தனர்.
