ஜெருசலேம்: இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் ஐநா பாலஸ்தீன அகதிகள் வளாகம் உள்ளது. கிழக்கு ஜெருசலேமில் அமைந்துள்ள இந்த வளாக கட்டிடங்களை புல்டோசர் மூலம் இஸ்ரேல் இடித்து தரைமட்டம் ஆக்கியது. காசா பகுதி மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கும் குழுக்கள் மீது இஸ்ரேல் அரசு கடும் கட்டுப்பாடுகள் விதித்த நிலையில் அதன் அடுத்த கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்று ஐக்கயி நாடுகளின் நிவாரண முகமை செய்தி தொடர்பாளர் ஜோனாதன் போவ்லர் தெரிவித்தார்.
