சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

சென்னை: திமுக மாற்றுத்திறனாளிகள் அணி மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை அண்ணா அறிவாலயம் அண்ணா-கலைஞர் சிலை அருகில் நடந்தது. விழாவிற்கு மாநில தலைவர் ரெ.தங்கம் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொங்கல் தொகுப்பினை வழங்கினர். விழாவில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ தாயகம் கவி, ஆர்.பத்மநாபன், பிடி சி.ஜி.செல்வராஜ், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திருக்குவளை டாக்டர் என். அம்பாள்குமார், பொருளாளர் க.இளங்கோவன், சரிதா தங்கம், பா.சக்தி வேல், பட்டுக்கோட்டை வீர.சரவணன், க.எழிலன், இரா.கோவிந்தராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: