அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை

 

மதுரை: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகம் நடத்துவதற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்துவதுதான் சரியாக இருக்கும். ஜல்லிக்கட்டு போட்டி என்பது ஐபிஎல் மேட்ச் கிடையாது. பல்வேறு போராட்டங்களுக்குப் பின் ஜல்லிக்கட்டு போட்டி மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தியதன் காரணமாகவே பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: