×

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

டோக்கியோ: ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஷிமானே மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது. மாகாண தலைநகரான மாட்சு மற்றும் அருகில் உள்ள நகரங்கள் அண்டை மாகாணமான டோட்டோரியில் உள்ள சில நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

சுமார் 10கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி இருந்தது. இந்த நிலடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை . நிலநடுக்கத்தை தொடர்ந்து அதிவேக ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. நிலநடுக்கத்தின் காரணமாக பெரிய சேதங்கள் அல்லது உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

Tags : Japan ,TOKYO ,Japan Meteorological Survey Center ,Shimane province ,Matsu ,
× RELATED அரசியல் மாற்றத்தை வலியுறுத்தி...