×

அரசியல் மாற்றத்தை வலியுறுத்தி போராட்டம்; ஈரான் கலவர பலி 36 ஆக உயர்வு: அமெரிக்க அதிபர் எச்சரிக்கை

டெஹ்ரான்: ஈரானில் பொருளாதார நெருக்கடியால் தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் கடந்த டிசம்பர் மாதம் ஈரானிய ரியால் பணமதிப்பு சரிவு மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக டெஹ்ரானில் உள்ள பெரிய சந்தையில் போராட்டம் வெடித்தது. ஆரம்பத்தில் பொருளாதாரப் பிரச்னைகளுக்காகத் தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது அரசியல் மாற்றத்தை வலியுறுத்தி ‘இஸ்லாமிய குடியரசு ஒழிக’ என்ற கோஷங்களுடன் 27 மாகாணங்களில் உள்ள 270 இடங்களுக்குப் பரவியுள்ளது.

கடந்த 10 நாட்களாக நீடித்து வரும் இந்தக் கலவரத்தில் இதுவரை 4 முதல் 6 குழந்தைகள் மற்றும் 2 பாதுகாப்புப் படையினர் உட்பட 36 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. மேலும், நாடு முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி, ‘மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கேட்க வேண்டும் என்றாலும், கலகக்காரர்கள் தகுந்த இடத்தில் வைக்கப்பட வேண்டும்’ என்று எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில் ஈரானிய பாதுகாப்புப் படையினர் அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது தொடர்ந்து வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டால், ‘அமெரிக்கா ஆயுதங்களுடன் தயாராக உள்ளது, தலையிட நேரிடும்’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு முறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Iran ,US ,TEHRAN ,
× RELATED போர் விமானங்களை வாங்க பாகிஸ்தானுடன் வங்கதேசம் பேச்சுவார்த்தை..!!