கொடைக்கானலில் குழந்தை இயேசு ஆலயத் திருவிழா கொடியேற்றம்: 14ம் தேதி சப்பர பவனி

 

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உகார்தே நகர் பகுதியில் அற்புத குழந்தை இயேசு ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக குழந்தை இயேசுவின் திருஉருவம் பொறித்த கொடி உகார்தே நகர் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக அற்புத குழந்தை இயேசு ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. சிறப்பு திருப்பலிக்கு பின் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து தலைமையில் பங்குத்தந்தை பாப்புராஜ் முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது.

இதில் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன் உட்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழா வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. விழாவில் தினமும் சிறப்பு திருப்பலி, நவநாள் திருப்பலி, பிரார்த்தனை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வாக 14ம் தேதி குழந்தை இயேசு சப்பர பவனி நடைபெறுகிறது.

Related Stories: