×

மாவோயிஸ்ட் தலைவன் உள்பட 20 பேர் போலீசில் சரண்

 

திருமலை: ஐதராபாத் டிஜிபி அலுவலகத்தில் அதிநவீன ஆயுதங்களை ஒப்படைத்து மாவோயிஸ்ட் இயக்க முக்கிய தலைவர் உள்பட 20 பேர் சரணடைந்தனர். இந்தியாவில் மாவோயிஸ்ட் இயக்கத்தை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இந்த காலக்கெடு நெருங்கி வருவதால் மாவோயிஸ்ட்கள் சரணடைவது அதிகரித்துள்ளது. மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவரும், மக்கள் விடுதலை கெரில்லா இயக்க (பிஎல்ஜிஏ) தலைவருமான பார்சேசுக்கா என்ற தேவா, மாவோயிஸ்ட் இயக்கத்தின் தெலங்கானா மாநிலக்குழு உறுப்பினர் கன்கனாலா ராஜிரெட்டி என்ற வெங்கடேஷ், மற்றும் அவரது மனைவி உள்பட 20 மாவோயிஸ்டுகள் நேற்று ஐதராபாத் டிஜிபி சிவதர்ரெட்டி முன் சரணடைந்தனர்.

அப்போது அவர்களிடம் இருந்த 48 அதிநவீன ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் கூடுதலாக, அவரது கட்டுப்பாட்டில் உள்ள இயக்கத்தின் பராமரிப்புக்காக மாவோயிஸ்ட்டுகளால் ஒப்படைக்கப்பட்ட ரூ.20 லட்சம் ரொக்கத்தையும் தேவா ஒப்படைத்தார். ஆந்திராவில் மாவோயிஸ்டு-போலீசார் இடையே நடந்த மோதலில் மக்கள் விடுதலை கெரில்லா இயக்க தலைவர் ஹிட்மா சமீபத்தில் இறந்த பிறகு, தேவா அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தேவாவுடன், சரணடைந்தவர்களில் அவரது பாதுகாவலர்கள் 10 பேர், கன்கனால ராஜிரெட்டி, அவரது மனைவி ஈஸ்வரி மற்றும் தாரா சாரையா ஆகியோர் இருந்தனர். தேவாவும் ஹிட்மாவும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

தேவா 2003ம் ஆண்டு ஹிட்மாவின் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு மாவோயிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். சுமார் 400 உறுப்பினர்களைக் கொண்ட மாவோயிஸ்ட் இயக்க படை பிரிவில் ஒரு பட்டாலியனின் தளபதியாக அவர் இருந்தார். தற்போது, தேவா சரணடைந்த பிறகு ஒரு சிலரே எஞ்சி இருப்பதாக டி.ஜி.பி ஷிவ்தர்ரெட்டி தெரிவித்தார். போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களில் இரண்டு மிகவும் மேம்பட்ட இலகுரக இயந்திரத் துப்பாக்கிகள்.

அவற்றில் ஒன்று அமெரிக்கத் தயாரிப்பு கோல்ட் ரைபிள், மற்றொன்று இஸ்ரேலிய தயாரிப்பு டவர் சிக்யூபி, எட்டு ஏகே-47 ரைபிள்கள். 10 ஐஎன்எஸ்ஏஎஸ் ரைபிள்கள், 8 எஸ்எல்ஆர் துப்பாக்கிகள், 4 கையெறி குண்டுகள், 11 ஒற்றை-ஷாட் ரைபிள்கள், ஒரு ஏர் கன், 93 மேகசின்கள் மற்றும் 2,206 தோட்டாக்கள் ஆகியவை அடங்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags : Maoist ,Tirumala ,Hyderabad ,DGP ,central government ,India ,Maoists… ,
× RELATED யாருடைய உத்தரவின் பேரில் அடுத்தடுத்த...