டெல்லி : டெல்லி காற்று மாசு விவகாரத்தில் விவசாயிகளை மட்டுமே குறை சொல்ல முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் நீதிபதிகள்,” விவசாயிகள் வைக்கோலை எரிப்பதால்தான் காற்று மாசு என்று பழிபோடுவதை ஏற்கமுடியாது. கொரோனா காலத்தில் வைக்கோல் எரிக்கப்பட்டது; ஆனால் வாகனங்கள் இயங்காததால்தான் நீலவானம் தெரிந்தது. காற்று தர மேலாண்மை ஆணையம் சட்ட ரீதியான அமைப்பு; மாசுக்கான காரணத்தை கண்டறியாதது ஏன்?,”இவ்வாறு தெரிவித்தனர்.
