×

உத்தரப் பிரதேச வாக்காளர் வரைவுப் பட்டியலிலிருந்து இறந்த 46 லட்சம் பேர் உள்பட 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

டெல்லி: சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்திற்கான திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மாநிலத்தில் இறந்த 46 லட்சம் வாக்காளர்கள் உட்பட 2.89 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 18.70% பேர் நீக்கப்பட்டுள்ளனர்,

சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி தொடங்கிய அக்டோபர் 2025-ல் இருந்த 15.44 கோடி வாக்காளர்களுடன் ஒப்பிடுகையில், தற்போது உத்தரப் பிரதேசத்தில் 12.56 கோடி (12,55,56,25) வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக ஆணையம் கூறியுள்ளது. பெயர்கள் நீக்கப்பட்ட 2.89 கோடி பேரில், 2.17 கோடி பேர் வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்துள்ளனர், 46.23 லட்சம் பேர் இறந்துவிட்டனர் மற்றும் 25.47 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்துள்ளனர்.

ECINET செயலி மூலம் வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் வரைவுப் பட்டியலில் உள்ளதா என்பதைத் தங்கள் கைபேசிகளிலேயே சரிபார்க்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இறுதிப் பட்டியல் மார்ச் 6-ஆம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Uttar Pradesh ,Delhi ,Election Commission ,
× RELATED கதைக்காக பாக்யராஜா… பாக்யராஜுக்காக...