×

பிரபல மலையாள நடிகர் மரணம்

 

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகரும், தயாரிப்பு நிர்வாகியுமான கண்ணன் பட்டாம்பி (62) உடல் நலக்குறைவால் நேற்று இரவு மரணமடைந்தார். மலையாளத்தில் புலிமுருகன், ஒடியன், கீர்த்திசக்ரா, அனந்தபத்ரம், காந்தகார், கிரேசி கோபாலன் உள்பட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் கண்ணன் பட்டாம்பி. பிரபல மலையாள இயக்குனரும், நடிகருமான மேஜர் ரவியின் தம்பி ஆவார். ஏராளமான மலையாளப் படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணிபுரிந்துள்ளார்.

இந்தநிலையில் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்கிடையே நேற்று இரவு சுமார் 11.40 மணியளவில் மரணமடைந்தார். இந்தத் தகவலை மேஜர் ரவி சமூக வலைதளம் மூலம் வெளியிட்டுள்ளார். இவரது உடல் தகனம் இன்று மாலை 4 மணிக்கு கண்ணன் பட்டாம்பியின் சொந்த ஊரான பாலக்காடு மாவட்டம் ஞாங்காட்டிரியில் நடைபெறும்.

Tags : Thiruvananthapuram ,Kannan Patambi ,Kannan ,
× RELATED கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக ஜனவரி...