×

ஐஎல் டி.20 தொடரில் டெசர்ட் வைபர்ஸ் சாம்பியன்

 

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் 4வது சீசன் இன்டர்நேஷனல் லீக் டி.20 (ஐஎல் டி.20) தொடர் நடைபெற்று வந்தது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் நேற்றிரவு துபாயில் நடந்த பைனலில் டெசர்ட் வைபர்ஸ்-எம்.ஐ. எமிரேட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெசர்ட் வைபர்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது. கேப்டன் சாம்கரன் அதிகபட்சமாக 74 ரன் அடித்தார்.

பின்னர் களம் இறங்கிய எம்ஐ எமிரேட்ஸ் அணியில் சாகிப்அல்ஹசன் 36, கேப்டன் பொல்லார்ட் 28 ரன் எடுக்க 18.3 ஓவரில் 136 ரன்னுக்கு சுருண்டது. இதனால் டெசர்ட் வைபர்ஸ் 46 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

Tags : Desert Vipers ,IL T20 ,Dubai ,International League T20 ,United Arab Emirates ,MI Emirates ,
× RELATED ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் வீழ்ந்தார் வீனஸ்