- டி. 20 இல்
- எம்ஐ கேப்டன்
- தென் ஆப்பிரிக்கா
- SA
- D20
- மும்பை இந்தியர்கள்
- மி
- ராஜஸ்தான் ராயல்ஸ் பாரல் ராயல்ஸ்
கேப்டவுன்: தென்ஆப்ரிக்காவின் 4வது சீசன் எஸ்ஏ டி.20 தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 13வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்சின் எம்ஐ கேப்டவுன், ராஜஸ்தான் ராயல்சின் பார்ல் ராயல்ஸ் மோதின. முதலில் பேட் செய்த எம்ஐ கேப்டவுன் 18.4 ஓவரில் 88 ரன்னுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ரசா ஹென்ட்ரிக்ஸ் 18, நிக்கோலஸ் பூரன், ரியான் ரிக்கல்டன் தலா 17 ரன் அடித்தனர். பார்ல்ஸ் ராயல்ஸ் பவுலிங்கில் சிக்கந்தர் ராசா 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் களம் இறங்கிய ராயல்ஸ் 13 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. சிக்கந்தர் ராசா ஆட்டநாயகன் விருது பெற்றார். 4வது போட்டியில் அந்த அணிக்கு இது 3வது வெற்றியாகும். எம்ஐ 5வது போட்டியில் 4வது தோல்வியை சந்தித்தது. ஒரு போட்டி ரத்தானது. இன்று இரவு 9 மணிக்கு சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்-பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மோதுகின்றன.
