அந்தியூரில் வி.சி.க. சார்பில் வேளாண் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜன. 24: அந்தியூரில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக  ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை  வள்ளுவன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன்,  பவானிசாகர் தொகுதி செயலாளர் தம்பிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். வேளாண்  தொடர்பான குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை தமிழக அரசே இயற்ற வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர்  சண்முகம், மாநில துணை செயலாளர் ஈஸ்வரன், வடக்கு மாவட்ட பொருளாளர்  தங்கவேல், துணை செயலாளர் பொன்னரசு, மாநில செயற்குழு உறுப்பினர் பில்லா மணி,  மேற்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை சித்ரா, கோபி சட்டமன்ற தொகுதி துணை  செயலாளர் திருமா பூபதி, வடக்கு மாவட்ட துணை செயலாளர் சாரதா, வணிகர் அணி,  மாவட்ட அமைப்பாளர்கள் துரைசாமி, மாரசாமி, மாவட்ட பொறுப்பாளர் சிவக்குமார்,  ஒன்றிய செயலாளர் தங்கராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>