சென்னை: ஏவிஎம் நிறுவனத்தை பற்றி குறிப்பிடாமல் தமிழ் திரையுலகத்தை பற்றி குறிப்பிட முடியாது என திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் நினைவேந்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் ‘ஏவிஎம் நிறுவன பொன் விழாவில் 190 கேடயங்களை மேடையில் நின்றுகொண்டே கலைஞர் வழங்கினார். கலைஞருக்கும் ஏவிஎம் நிறுவனத்துக்கும் நெருங்கிய நட்பு உண்டு. நான் மேயராக இருந்தபோது பள்ளி மாணவர்களை விமானத்தில் திருப்பதி அழைத்துசெல்ல ஏவிஎம் சரவணன் காரணமாக இருந்தார்’ எனவும் முதலமைச்சர் பேசினார்.
