அரசியலில் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை தேமுதிக யாருடன் கூட்டணி 9ம் தேதி முடிவு தெரியும்: விஜய பிரபாகரன் தகவல்

மதுரை: அரசியலில் நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை. கூட்டணி குறித்து ஜன.9ல் தெரிவிக்கப்படும் என விஜய பிரபாகரன் கூறியுள்ளார். மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியிலுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் தலைமையில் தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் விஜயபிரபாகரன் கூறியதாவது: விஜயகாந்த் சொன்னதை மீண்டும் சொல்கிறேன். அரசியலில் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை. அடுத்து என்ன நடக்கப் போகிறது எனத் தெரியாது. வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஜன.9ல் தெரிவிப்பதாக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். அன்றைய தினம் நடக்கும் எங்கள் மாநாட்டில் கூட்டணி குறித்து சொல்வோம். ஜன.15க்கு மேல் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம். நான் தேமுதிக மாநாட்டில் இருப்பேன். விஜய் ஜனநாயகன் படம் பார்த்துக் கொண்டிருப்பார். ஜனநாயகன் ரிலீஸ் ஆகும்போது கிளைமாக்ஸ் என்னவாக இருக்கும் என்பதை வெயிட் செய்து பார்ப்போம். மாநாட்டின் கிளைமாக்சில் பதில் என்ன என்பது குறித்து பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சொல்வார். இவ்வாறு கூறினார்.

Related Stories: