சென்னை: அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல்களில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி, விருப்ப மனு அளித்துள்ளவர்களுடனான நேர்காணல், ராயப்பேட்டை, அதிமுக தலைமை அலுவலகத்தில் 9.1.2026 (வெள்ளி) முதல் 13.1.2026 வரை நடைபெற உள்ளது. 9ம் தேதி (வெள்ளி) – கோவை மாநகர், புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு, நீலகிரி, திருப்பூர் மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு, நாமக்கல், சேலம் மாநகர், புறநகர், ஈரோடு மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு, கரூர், திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு.
10ம் தேதி (சனி) – கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தஞ்சாவூர் கிழக்கு, மேற்கு, மத்தியம், தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாநகர், புறநகர், விருதுநகர் கிழக்கு, திருவாரூர், மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு, தேனி கிழக்கு, மேற்கு, புதுக்கோட்டை வடக்கு, தெற்கு. 11ம் தேதி (ஞாயிறு) – விருதுநகர் மேற்கு, கடலூர் கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி புறநகர் வடக்கு, மாநகர், புறநகர் தெற்கு, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தர்மபுரி. 12ம் தேதி (திங்கள்) – விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, தென்காசி வடக்கு, தெற்கு, திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, கிழக்கு, மத்தியம், வேலூர் மாநகர், புறநகர், ராணிப்பேட்டை கிழக்கு, மேற்கு, திருப்பத்தூர்.
13ம் தேதி (செவ்வாய்) – திருவள்ளூர் வடக்கு, மத்தியம், தெற்கு, கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு, மேற்கு, தென்சென்னை வடக்கு (கிழக்கு), வடக்கு (மேற்கு), தெற்கு (கிழக்கு), (மேற்கு), புதுச்சேரி, கேரளா, சென்னை புறநகர், வடசென்னை வடக்கு (கிழக்கு, வடக்கு (மேற்கு), தெற்கு (கிழக்கு), தெற்கு (மேற்கு) ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறும். அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்துள்ளவர்கள், தொகுதி மற்றும் வெற்றி வாய்ப்பு நிலவரங்களை அறிந்திட, `தங்களுக்காக விருப்ப மனு அளித்துள்ளவர்கள் மட்டும்’ அசல் ரசீதுடன் தவறாமல், தலைமை கழகத்திற்கு வருகை தந்து, நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். நேர்காணல் காலை மற்றும் மாலை நடக்கிறது.
