சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அதிமுகவில் 10,175 பேர் விருப்ப மனு

சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு அளித்துள்ளதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், தொண்டர்கள் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் டிச.15ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும், டிச.28ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும் விருப்ப மனுக்களை வழங்கினர்.

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து 2,187 விருப்ப மனுக்களும், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வேண்டி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா உட்பட 7,988 விருப்ப மனுக்களும் என மொத்தம் 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன என அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories: