சென்னை: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சொன்னதை செய்வார் என்ற முழு நம்பிக்கை இருந்து வந்தது.
முதற்கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர், சமையல் உதவியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகை ரூ.500 வழங்கியதை மாற்றி, இந்த ஆண்டு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை உரித்தாக்குகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
