கார், பாட்டில்கள் பறிமுதல் தாயை தேடி வந்தபோது பரிதாபம் நாய்கள் கடித்து குதறி மான் குட்டி பலி

பெரம்பலூர், ஜன.24: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தெரு நாய்களிடம் சிக்கி கடிபட்ட மான் குட்டி இறந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காப்புக் காடுகளில் அரியவகைப் புள்ளி மான்கள் ஆயிரக்கணக்கில் வசித்து வருகின்றன. இவை வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழையும்போது தெருநாய்களிடம் கடிபட்டு இறப்பது வாடிக்கையாக உள்ளன. இந்நிலையில் கடந்த 22ம்தேதி பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சாலையில் சுற்றித் திரிந்த 3 வயது பெண்மான் ஒன்று, தெருநாய்கள் துரத்தியதால் மிரண்டு ஓடிய போது வீட்டு சுவற்றில் மோதி தலையில் அடிபட்டதால் பரிதாபமாக இறந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தாயைத் தேடி தன்னந்தனியாக சுற்றிக் கொண்டிருந்த ஒரு வயது ஆண் மான்குட்டியை தெரு நாய்கள் துரத்தி கடித்தது.

இதில் மான்குட்டி துடிதுடித்து பலியானது. தாயை தேடி அலைந்து கொண்டிருந்தபோது நாய்களிடம் சிக்கித் தானும்பலியானது. தகவல் கிடைத்து பெரம்பலூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான குழுவினர் மானை மீட்டு பெரம்பலூர் மாவட்ட வனத்துறையிடம் ஒப்படைத்தனர். மாவட்ட வன அலுவலர் இளங் கோவன் உத்தரவின்பேரில் வனச்சரகர் சசிகுமார் வனவர் குமார், வனக்காப்பாளர் ராஜு உள்ளிட்டோர் மானை பிரேதப் பரிசோதனைக்குபின் சித்தளி காப்புக்காடு பகுதியில் புதைத்தனர்.

Related Stories:

>