பெரம்பலூரில் பெண் காவலர் தற்கொலை முயற்சி பணிச்சுமை காரணமா?

பெரம்பலூர், ஜன. 24: பெரம்பலூர் மாவட்ட ஆயுதப் படையில் பணிபுரிந்து வரும் பெண் தலைமை காவலர் பணிச்சுமை காரணமாக நேற்று முன்தினம் இரவு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. பெரம்பலூர் அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வருபவர் பெரியசாமி மனைவி கோகிலா (41). ஆயுதப் படையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக பணிச் சுமையால் அவதியடைந்த கோகிலா, தனக்கு மாற்றுப்பணி வழங்கிட வேண்டுமென எஸ்பியிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற யோகா மற்றும் உடற்பயிற்சியில் பங்கேற்ற கோகிலா மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அவரை உடனிருந்த காவலர்கள் மீட்டு, பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, பணிச்சுமை காரணமாக கோகிலா நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>