தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை சரிவு பவுன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி: 3 நாட்களில் ரூ.4000 குறைந்த தங்கம் விலை

சென்னை: தங்கம் விலை அதிரடியாக குறைந்து வருவது நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.4000 குறைந்த நிலையில் ஒரு பவுன் ரூ.1லட்சத்துக்கு கீழ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடை, சீனா மற்றும் இந்தியா மீதான வரி உயர்வு, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள போர் பதற்றம் உள்ளிட்டவையால் தங்கம் விலை உயர்ந்து கொண்டே போகிறது.

இதனால் தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சம் தொட்டு ஏழை எளியோருக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. இனி நினைத்தால் கூட தங்கம் வாங்க முடியாது போல என்ற அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருவது, சாமானிய மக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனென்றால் தங்கம் விலை கடந்த 8 மாதங்களில் மட்டும் பவுனுக்கு ரூ.45 ஆயிரம் வரை உயர்ந்திருக்கிறது. அதுவும், டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது, கடந்த 15ம்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்​சத்தை தாண்​டி, வரலாறு காணாத புதிய உச்​சத்தை பதிவு செய்​தது.

பின்​னர் விலை ஏற்ற இறக்​க​மாக இருந்த நிலை​யில் 27ம்தேதி ரூ.1,04,800-ஆக உயர்ந்​து, மீண்​டும் புதிய உச்​சத்தை தொட்​டது. இதேபோன்று வெள்​ளி​யும் கிலோவுக்கு ரூ.2.85 லட்​ச​மாக அதி​கரித்து புதிய உச்​சத்தை பதிவு செய்​தது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் மீண்டும் தங்கம் விலை சரியத் தொடங்கியது. கடந்த 28ம்தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 சரிந்து, ஒரு பவுன் ரூ.1,04,160க்கு விற்பனையான நிலையில், நேற்று மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

29ம்தேதி தங்​கத்​தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,360 அதிரடியாக குறைந்​து, ரூ.1 லட்​சத்து 800-க்கு விற்​கப்​பட்​டது. ஒரு கிராமுக்கு ரூ.420 குறைந்​து, ரூ.12,600-க்கு விற்​பனை​யானது. இந்நிலையில், தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் அதிரடியாக சரிவை சந்தித்தது. நேற்று காலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.ஒரு லட்சத்து 400க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் 12,550க்கு விற்பனை ஆனது.

நேற்று காலையில் விலை சரிந்ததால் தங்க நகை பிரியர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், மாலையிலும் தங்கம் விலை குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்று மாலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு பவுன் ரூ.99,840 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ. 12,480-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.960 குறைந்து, பவுன் ஒரு லட்சத்திற்கு கீழ் வந்தது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குபவர்களுக்கு புத்தாண்டு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4000 குறைந்துள்ளது. தங்கம் விலை அதிரடியாக குறைந்து வருவதால் பண்​டிகை மற்​றும் குடும்ப நிகழ்ச்​சிக்​காக நகை வாங்​க கரு​தி​யிருந்​தவர்​கள் மகிழ்ச்சி அடைந்​தனர்.

* தங்கம் கடந்து வந்த பாதை
2025ம் ஆண்டு தொடக்கத்தில் ஜன.1ம்தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.57,200க்கு விற்பனையானது. அதைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்துவந்த தங்கம் விலை ஜன. 16ம் தேதி பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.59,120க்கு விற்பனையானது. அதன் பின்னர் தொடர்ந்து உயர்ந்துவந்த தங்கத்தின் விலை, ஜன.22ம் தேதி வரலாறு காணாத அளவில் ரூ.60,200க்கு விற்பனையானது.

தொடர்ந்து, வரலாற்றில் முதல் முறையாக கடந்த பிப். 11ம் தேதி தங்கத்தின் விலை பவுன் ரூ.64,000ஐ கடந்தது. பின்னர் பிப்.20ம்தேதி பவுன் ரூ.64,560க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்ட நிலையில், மார்ச் 14ம்தேதி ரூ.66,400க்கும் விற்பனையானது. ஏப்ரல் 12ம்தேதி புதிய உச்சமாக ரூ.70,160க்கு விற்பனை செய்யப்பட்டது. மே 8ம்தேதி பவுன் ரூ.73,040க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் டிசம்பர் 15ம்தேதி ஒரு லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

* தங்கம் விலை குறைவு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் – டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.89.85 ஆக உள்ளது.

ஒருபக்கம் ரூபாய் மதிப்பு மீண்டு வரும் சூழலில், கிறிஸ்துமசுக்கு பிறகு சர்வதேச நாடுகளில் குறுகிய ​கால லாபத்​தைக் கருத்தில் கொண்டு முதலீட்​டாளர்​கள் தங்​கத்தை விற்கத் தொடங்கினர். இதனால், தங்கம் விலையும் தொடர்ந்து சரியத் தொடங்கியது. எனினும், இனி வரும் நாட்களில் வழக்கம்போல் ஏற்ற இறக்கங்கள் இருக்கக் கூடும் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Related Stories: