போட்டி போட்டு உயர்ந்த நிலையில் தங்கம் பவுனுக்கு ரூ.640 குறைந்தது: வெள்ளியும் கிலோவுக்கு 4000 ரூபாய் சரிந்தது

சென்னை: போட்டி போட்டு அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.640 குறைந்தது. அதேபோல வெள்ளியும் கிலோவுக்கு ரூ.4000 குறைந்தது. தங்கம் விலை ஆண்டு இறுதியில் அதிரடியாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 15ம் தேதி தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத உச்சத்தை பதிவு ெசய்தது. அதாவது, அன்றைய தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 120க்கு விற்றது. ஒரு பவுன் ஒரு லட்சம் என்ற இமாலய உச்சத்தை எட்டி அனைவரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தங்கம் விலை தான் இப்படி இருக்கிறது என்று பார்த்தால், தங்கத்திற்கு போட்டியாக ெள்ளி விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் தங்கம் விலை காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,04,800க்கு விற்றது. இதேபோல, வெள்ளி விலையும் காலை, மாலை என கிலோவுக்கு ரூ.31,000 உயர்ந்து பார் வெள்ளி ரூ.2.85 லட்சத்துக்கும் விற்றது. நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் தங்கம், வெள்ளி மார்க்கெட்டுக்கு விடுமுறை. இதனால், விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் முந்தைய நாள் விலையிலேயே தங்கம், வெள்ளி விற்பனையானது.

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை குறைந்து இருந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.13,020க்கும், பவுனுக்கு ரூ.640 குறைந்து ஒரு பவுன் ரூ.1,04,160க்கும் விற்றது. தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் நேற்று குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.281க்கும், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 81 ஆயிரத்துக்கும் விற்றது. தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இந்த விலை குறைவு என்பது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

Related Stories: