×

வாக்களிப்பதன் அவசியம் குறித்து பழங்குடியினர் பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊட்டி, டிச. 30: சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026ல் நடைபெறுவதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, இளம் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நீலகிரி பூச்சிப் பிடிப்பான் (நீலகிரி பிளை கேட்ச்சர்) சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. சின்னத்துடன் மலையின் குரல், நம் வாக்கு! என்ற விழிப்புணர்வு வாசகம் இடம் பெற்றுள்ளது. சின்னத்திற்கு நீலா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பழங்குடியின கிராமங்கள் மற்றும் இதர மக்கள் வசிக்க கூடிய பகுதிகளுக்கு சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ரங்கோலி கோலங்கள் வரைந்தும், இளைஞர்களிடையே விளையாட்டு போட்டிகள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் முடிவடைந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விடுபட்டவர்களின் பெயர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நீலகிரி பிளை கேட்சர் பறவை சின்னம் வெளியிடப்பட்டு வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றனர்.

Tags : Ooty ,Legislative Assembly general elections ,
× RELATED சூதாடிய 8 பேர் கைது