- காப்பீட்டு குறை தீர்க்கும் மனு
- முகாம்
- ஊட்டி
- அஞ்சல் ஆயுள் காப்பீட்டு குறை தீர்க்கும் முகாம்
- ஊட்டி மற்றும்
- குன்னூர் தலைமை தபால் நிலையங்கள்
- நீலகிரி அஞ்சல் பிரிவு
- கண்காணிப்பாளரை
- அசோக் குமார்
- அஞ்சல் ஆயுள் காப்பீடு…
ஊட்டி, டிச.25: அஞ்சல் ஆயுள் காப்பீடு குறை தீர்க்கும் முகாம் ஜனவரி மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் ஊட்டி மற்றும் குன்னூர் தலைமை அஞ்சலகங்களில் நடக்கிறது. நீலகிர அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அஞ்சல் ஆயுள்காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு வாடிக்கையாளர்களின் புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு சிறப்பு காப்பீடு குறை தீர்க்கும் முகாம் வரும் ஜனவரி மாதம் 2 மற்றும் 3ம் தேதி ஆகிய நாட்களில் ஊட்டி மற்றும் குன்னூர் ஆகிய பகுதிகளில் நடக்கிறது.
இந்த முகாமில் காப்பீடு உட்பட அனைத்து விதமான விண்ணப்பங்கள் வழங்கப்படும். இணையவழி பிரீமியம் செலுத்துதல் பற்றிய விவரங்கள தெரவிக்கப்படும். பாலிசிதிருத்தம் மற்றும் புதுப்பிப்பு குறித்து தெரிவிக்கப்படும். ஆவணங்கள் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு தீர்வு காணப்படும் என கோட்ட கண்காணிப்பாளர் அசோக்குமார் கூறியுள்ளார்.
