×

விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

ஊட்டி, டிச.27: நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி உல்லத்தி பகுதியில் நடந்தது.  மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் அர்ஜூணன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் உல்லத்தி மேலூர் மற்றும் சக்திநகர் பகுதி விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.இதில், ஒன்றிய செயலாளர் குமார், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் குண்டன், கோத்தி பேரூராட்சி செயலாளர் ஜெய், பாசறை மாவட்ட தலைவர் சுரேஷ், ஒன்றிய துணை செயலாளர் கணேசன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

 

Tags : Ooty ,Nilgiris District AIADMK ,MGR ,Jayalalithaa ,Ullathi ,District Secretary ,Kappachi Vinoth ,Arjunan… ,
× RELATED மசினகுடியில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்