- ஊட்டி
- 9வது குறும்பட விழா
- ஊட்டி துப்பாக்கி சுடும் தளம்
- ஊட்டி குறும்பட விழா
- படப்பிடிப்பு வீச்சு
- முகமது பாரூக்
- லக்ஷ்மி பவ்யா
ஊட்டி, டிச.27: ஊட்டி சூட்டிங்மட்டத்தில் நேற்று துவங்கிய 9வது குறும்பட விழா 3 நாட்கள் நடக்கிறது. ஊட்டி அருகேயுள்ள சூட்டிங்மட்டத்தில் ஊட்டி குறும்பட விழா நேற்று துவங்கியது. தலைவர் முகமது பாரூக் தலைமை வகித்தார். விழாவினை கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு துவக்கி வைத்தார். நீலகிரி எஸ்பி நிஷா, மாவட்ட
வன அலுவலர் கவுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து தலைவர் முகமது பாரூக் கூறியதாவது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக குறும்பட விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை தியேட்டர்களில் திரையிடப்பட்டு வந்தது. இம்முறை முதல் முறையாக சூட்டிங் மட்டம் பகுதியில் திறந்த வெளியில் திரையிடப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் அனைவரும் கண்டு ரசிக்கலாம்.
இந்த குறும்படம் விழா மூலம் சிறந்த இயக்குநர், நடிகர்கள் தேர்வு செய்யப்படுகிறது. ேமலும், சிறந்த குறும்படம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. குறும்படம் மூலம் நீலகிரி மாவட்டத்தில் பொருளாதாரம் மேம்பாடு அடைய வாய்ப்புள்ளது. 3 நாட்களில் 48 நாடுகளில் இருந்து 102 குறும்படங்கள் திரையிடப்படும். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகருக்கான யானை விருதுகள் வழங்கப்படும். என்றார்.
