‘‘அதிமுக களத்தில் இல்லையென்பதா’’ தவெகவினருக்கு நாவடக்கம் தேவை: செல்லூர் ராஜூ எச்சரிக்கை

மதுரை: ‘‘எங்கள் கட்சி களத்தில் இல்லையென்பதா’ தவெகவினருக்கு நாவடக்கம் தேவை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் பதிலடி கொடுத்துள்ளார். ரோட்டில் சமீபத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், களத்தில் இல்லாதவர்களைப் பற்றி நாங்கள் பேசப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மதுரையில் அளித்த பேட்டி: எங்கள் கட்சியை களத்தில் இல்லையென்பதா, நேற்று வந்த விஜய்க்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

விஜய் எத்தனை தேர்தலில் நின்று வென்றுள்ளார். எம்ஜிஆர் கட்சி தொடங்கிய உடனே ஆட்சிக்கு வந்தார். கட்சிக்காக சொந்தப் பணத்தை செலவு செய்தவர் எம்ஜிஆர். அவர் போல விஜய் ஆக முடியாது. வானத்தில் ஒரே சந்திரன். பூமியில் ஒரே ராமச்சந்திரன். அவர் போல யாரும் ஆக முடியாது. விஜய் எத்தனை தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுத்தார். அவருக்கு என்ன பின்புலம் உள்ளது. கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டும்தான். யாருமே கொள்கை கூட்டணி கிடையாது. நாங்கள் களத்தில் இல்லை எனச் சொல்வது முட்டாள் தனம். நாங்கள் களத்தில் இருக்கிறமோ இல்லையா என்பதை பொதுமக்கள் தான் தீர்மானிப்பார்கள். விஜயை விட வடிவேலு, நயன்தாராவுக்கு கூட்டம் கூடும். நடிகருக்கு கூட்டம் கூடத்தான் செய்யும். நயன்தாராவை பிரச்சாரத்துக்கு அழைத்துச் சென்றால்கூட கூட்டம் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: