அதிமுகன்னு சொன்னா என்னமோ மாதிரி இருக்கு: செல்லூர் ராஜூ கூச்சம்

மதுரை: மதுரையில் நேற்று நடந்த சவுராஷ்டிரா அரசியல் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். அப்போது, ‘செல்லூர் ராஜூவை வரவேற்க, சமூகத்தின் அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் மேடைக்கு வாருங்கள்’ என பெண் தொகுப்பாளர் மைக்கில் அழைப்பு விடுத்தார். உடனே செல்லூர் ராஜூ, ‘நான் பேசலாமா?’ என்றபடி, ‘‘நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

அதிமுக என்று சொல்லாதீர்கள். அண்ணா திமுக என்று சொல்லுங்கள். இன்னைக்கு எத்தனையோ திமுக இருக்கு. அதிமுக என்றால் என்னமோ மாதிரி இருக்கு. அனைவரும் சமம் என்ற நிலையில் அரசியல் இயக்கத்தை நடத்தியவர் அண்ணா. கட்சிக்கு அண்ணா பெயரை எம்ஜிஆர் வைத்தார். வருங்கால சந்ததிக்கு தெரியாமலே போயிடும். அதனால், அண்ணா திமுக என்று சொல்லுங்கள். தொகுப்பாளர் அம்மா, கொஞ்சம் மன்னிச்சுக்குங்கம்மா’’ என பேசினார்.

Related Stories: