ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது அன்புமணி பேட்டி

மதுரை: ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது என அன்புமணி கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில், நேற்று அன்புமணி அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 69 சதவீத இட ஒதுக்கீடை பாதுகாக்க வேண்டும். விரைவில் எங்கள் கூட்டணி குறித்து அறிவிப்போம். பேச்சுவார்த்தையில் இருக்கிறோம்.

எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும். கூட்டணி குறித்து இன்று என்னால் பேச முடியாது. பெரிய கூட்டணி முடிவாகும். ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்பது தான் எங்களது நிலைப்பாடு. நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்னை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: