பொதுக்குழுவை கூட்ட ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை: வழக்கறிஞர் பாலு அதிரடி பேட்டி

சென்னை: பாமக பொதுக்குழுவை கூட்ட ராமதாசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார். இதுதொடர்பாக நேற்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து ஒருவர் நீக்கப்பட்டதற்காக தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் மற்றும் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது ஜி.கே.மணிக்குதான். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.

இத்தோடு எங்கள் கட்சியில் எல்லா குழப்பங்களும் தீர்ந்துபோய்விட்டது. வரும் 29ம் தேதி சேலத்தில் பொதுக்குழு நடத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். இது சட்டவிரோதமானது. அப்படி ஓர் பொதுக்குழுவை நடத்த அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொதுக்குழுவில் என்ன தீர்மானங்கள் போட்டாலும் பாட்டாளி மக்கள் கட்சியை அது கட்டுப்டுத்தாது.

சாதி வாரி கணக்கெடுப்பு பல மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சீமான், விஜய் போன்றவர்கள் ஆதரவு தருகிறார்கள். பா.ம.க. சேரும் கூட்டனி தான் தமிழகத்தில் வெல்லும். கூட்டனி எந்த கட்சியுடன் என்று பொதுக்குழு கூடி அன்புமணி அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: