ஜோதிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

போச்சம்பள்ளி, ஜன.22: போச்சம்பள்ளியில் கருமலை நடுபழனி ஆண்டவர், புவனேஸ்வரி அம்மன், ஜோதிலிங்கேஸ்வரர், விநாயகர், நவக்ரக சமேத பரிவார தெய்வங்களின் ஆலய மகா கும்பாபிஷேக விழா வரும் 27ம் தேதி(புதன் கிழமை) நடக்கிறது. அன்று காலை 5.30 மணிக்கு மங்கள இசை, கணபதிபூஜை, மஹாபூர்ணாகுதி, தீபாராதனை, காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், தசதானம், தீபாராதனை நடைபெறுகிறது. காலை 11  மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

Related Stories:

>