சூளகிரி ஒன்றியத்தில் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

சூளகிரி, ஜன.22:  சூளகிரி ஒன்றியத்தில், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு பணியில் ஈடுபட்டார். சூளகிரி- பேரிகை இணைப்பு சாலை, உத்தனப்பள்ளியில் குப்பை கிடங்கு கட்டிடம் மற்றும் விளையாட்டு மைதானம், பெத்தசிகரலப்பள்ளியில் தார் சாலை, கானலட்டியில் நெல் களம் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். ஆய்வின்போது பிடிஓக்கள் விமல் ரவிக்குமார், பாலாஜி, ஒன்றிய பொறியாளர்கள் தீபமணி, ஊராட்சி தலைவர்கள் கலைச்செல்வி ராமன், லட்சுமிகாந்த், நரசிம்மன், பாப்பையா மற்றும் துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>