ஒரு பவுன் ஒரு லட்சத்து 3120க்கு விற்பனையாகி புதிய உச்சம்; வெள்ளி விலையும் கிடுகிடு

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலை மேலும் உயர்ந்து ஒரு பவுன் ஒரு லட்சத்து 3,120க்கு விற்பனையாகி புதிய உச்சம் கண்டது. அதே போல வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,890க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ஒரு லட்சத்து 3120க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.254க்கும், கிலோவுக்கு ரூ.9 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. சோலார் தகடுகள் தயாரிப்பு, எலக்ட்ரிக் கார் தயாரிப்பு, 5ஜி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு சாதனங்கள், செமி கண்டக்டர் சிப்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருவதும், தேவைக்கும், விநியோகத்துக்கும் இடைவெளி ஏற்படுவதும் வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.

Related Stories: