ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,03,120க்கு விற்பனை : வெள்ளி விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம்

சென்னை: தங்கம் வெள்ளியின் விலை மாறி மாறி உயர்ந்து வருகிறது. இன்று ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1,03,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராமுக்கு ரூ.9 அதிகரித்து ரூ.254க்கும் கிலோவுக்கு ரூ.9 ஆயிரம் அதிகரித்து ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. தங்கத்தைவிட பல மடங்கு வேகத்தில் விலை உயர்ந்து வருகிறது. வெள்ளிவிலை கடந்த ஓராண்டில் ரூ.110 சதவீதம் உயர்ந்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதி வெள்ளி ஒரு கிராம் ரூ.98க்கு விற்பனையானது. அதன் பிறகு படிப்படியாக விலை உயர்ந்து ரூ.156 அதிகரித்து கிராம் வெள்ளி ரூ.254 ஆக வெள்ளி வரலாற்றில் உச்ச விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

டிசம்பரில் மட்டும் கிராமுக்கு ரூ.58 விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வெள்ளி உற்பத்தி மற்றும் இறக்குமதி குறைந்து அதன் பயன்பாடு அதிகரித்து வருவதும் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் சோலார், சிப்பும் மின்சார வாகனங்கள் உற்பத்தி போன்றவற்றிற்கு வெள்ளி அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமன்றி சீனா, அமெரிக்கா இடையிலான வர்த்தக மோதலும் வெள்ளி உயர்வுக்கு காரணமாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

மின்சார வாகன உற்பத்தி துறையில் வெள்ளி பயன்பாடு அதிகரித்து வந்தாலும் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு சரிவு காரணமாகவும் வெள்ளி விலை உயர்ந்து வருவதாகவும் வரும் நாட்களில் மேலும் உயர்வை சந்திக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வெள்ளி விலை உயர்வு சில காலம் நீடிக்கும் என்பதால் பல்வேறு தரப்பினரும் அதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர். வரும் காலத்தில் வெள்ளி உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் அதன் விலையும் குறையும் இதனால் திடீர் விலையேற்றங்களை பார்த்து வெள்ளியில் முதலீடு செய்வது ஆபத்தானது என்றும் வெள்ளியிலிருந்து பெரிய அளவில் பலனை எதிர்பார்க்க முடியாது என்பதும் பொருளாதார நிபுணர்களின் கூற்றாக உள்ளது.

Related Stories: