முட்டை விலை 640 காசாக உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் சிங்கராஜ், நேற்று முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தினார். இதையடுத்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 640 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. புத்தாண்டையொட்டி கேக் தயாரிக்க, முட்டை ஆர்டர் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் முட்டை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், முட்டை விலை உயர்த்தப்பட்டு வருவதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர். முட்டையின் பண்ணை கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சில்லரை விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ.8 வரை விற்கப்படுகிறது.

Related Stories: