சென்னை : இன்று முதல் ஜனவரி 25ம் தேதி வரை இருப்பிட சான்றிதழை கட்டணமில்லாமல் பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இருப்பிட சான்றிதழ் கோருவோருக்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டணமில்லாமல் இருப்பிட சான்றிதழ் வழங்க துணை வட்டாட்சியர்களுக்கு அதிகாரமளித்து தமிழ்நாடு அரசு இவ்வாறு உத்தரவிட்டது.
