சென்னை: தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து அரசு சார்பில் இயக்குவது தொடர்பாக வரைவு அறிக்கை வெளியிட்டது அரசு. அரசின் வரைவு அறிக்கை தொடர்பாக 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து அரசு சார்பில் இயக்குவது தொடர்பாக வரைவு அறிக்கை தயாரிப்பதற்கான முக்கிய அம்சங்கள், அதன் தேவை, நன்மைகள், சவால்கள், மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இருக்கலாம்; குறிப்பாக பண்டிகை கால நெரிசலை சமாளிக்க, புதிய பேருந்துகள் வாங்க ஆகும் செலவைக் குறைத்து, பயணிகளின் வசதிக்காக இந்த திட்டம் முன்மொழியப்படுகிறது,
தேசியமயமாக்கப்பட்ட வழித்தடங்களில் வாடகைக்கு பேருந்துகளை எடுத்து இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து அதிக பேருந்துகள் இயக்க வேண்டியுள்ளது. தனியார் பேருந்துகளை வாடகைக்கு பெற்றால் அரசு சார்பில் அதிக பேருந்துகளை இயக்க முடியும் என அரசு விளக்கம் அளித்துள்ளது.
தற்போது வாடகைக்கு தனியார் பேருந்துகளை பெற்று ஒரு கோட்டத்துக்குள் மட்டும் இயக்குவது நடைமுறையில் உள்ளது. திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு விழுப்புரம், வேலூர் நகரங்களில் இருந்து தனியார் பேருந்துகள் அரசால் இயக்கப்பட்டன. பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்து அரசு போக்குவரத்துக்கழகத்தின் நிதிச் சுமையைக் குறைத்து புதிய பேருந்துகள் வாங்குவதைத் தவிர்த்து சிறந்த சேவையை வழங்க முடியும்
