சென்னை: தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து அரசு சார்பில் இயக்குவது தொடர்பாக அரசு வரைவு அறிக்கை வெளியிட்டது. அரசின் வரைவு அறிக்கை தொடர்பாக 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். தேசியமயமாக்கப்பட்ட வழித்தடங்களில் வாடகைக்கு பேருந்துகளை எடுத்து இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து அதிக பேருந்துகள் இயக்க வேண்டியுள்ளது.
