சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பவாரியா கொள்ளையர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனு தொடர்பாக நான்கு வாரத்துக்குள் பெரியபாளையம் போலீசார் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
