காப்பீட்டு தொகை வழங்க கோரி நாகையில் அழுகிய பருத்தி செடியுடன் விவசாயிகள் போராட்டம்

நாகப்பட்டினம், டிச. 24: பருத்திக்கு காப்பீட்டு தொகை வழங்க கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அழுகிய பருத்திச் செடியுடன் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நாகை மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியராஜன், ஒன்றிய பொருளாளர் காளிதாஸ், வடக்கு ஒன்றிய செயலாளர் அஞ்சாநெடுமாறன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட அவைத் தலைவர் விஜயராஜ் ஆகியோர் பேசினர்.மாநில ஒருங்கிணைப்பாளர் பஞ்சநதி பாரதி கண்டன கோஷங்களை எழுப்பினார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2024 -25ம் ஆண்டிற்கான பருத்தி பயிர்காப்பீட்டு தொகை 100 சதவீதம் இழப்பீடு மற்றும் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரண தொகையை கேசிமா காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

Related Stories: