நாகப்பட்டினம், டிச. 24: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி நாகப்பட்டினத்தில் நடந்தது.தமிழ் ஆட்சி மொழி சட்டம் கடந்த 1956ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ந்தேதி இயற்றப்பட்டது. இந்த நாளை நினைவு கூறும் வகையில் ஆட்சி மொழி சட்ட வாரம் கடந்த 17ந்தேதி தொடங்கி வரும் 27ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று விழிப்புணர்வு பேரணி நாகப்பட்டினம் அவுரித்திடலில் தொடங்கி நடைபெற்றது. பேரணியை ஆர்டிஓ சங்கரநாராயணன் தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆர்டிஓ அலுவலக வளாகத்தை அடைந்தது. பேரணியின் போது தமிழ் சார்ந்த கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆட்சி மொழி தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் கலந்து கொண்டவர்கள் கையில் ஏந்தி சென்றனர். தமிழ் வளர்ச்சி துறை நாகப்பட்டினம் உதவி இயக்குநர் குறளரசர் தமிழ் ஆட்சி மொழி சட்டம் குறித்து பேசினார்.
