கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

கோவில்பட்டி, டிச. 23: கோவில்பட்டியில் கஞ்சா விற்ற சிறுவன் உள்ளிட்ட 2 பேரை கைதுசெய்த போலீசார், இருவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கோவில்பட்டி கிழக்கு இன்ஸ்பெக்டர் மாரியப்பன், தனிப்பிரிவு எஸ்ஐ மணிமாறன் மேற்பார்வையில் எஸ்ஐ சண்முகம், தனிப்பிரிவு காவலர் அருணாசலம், கார்த்திக் உள்ளிட்ட போலீசார் கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே மூப்பன்பட்டி கம்மாக்கரை அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கையில் பையுடன் நின்றிருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனையிட்டனர். இதில் அப்பைகளில் 1.5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்தபோது அவர்கள், கோவில்பட்டி நடராஜபுரம் சின்னபாண்டி மகன் கார்த்திக் என்ற கோழி கார்த்திக் (21) மற்றும் குமரெட்டியாபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், இருவரும் கோவையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைதுசெய்தனர்.

Related Stories: