நாகர்கோவில், டிச.23: நாகர்கோவில் ஒழுகினசேரியில் மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சி 14வது வார்டு ஒட்டுப்புரைத் தெருவில் மாவட்ட மைய நூலகம் அருகே மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணியை மேயர் மகேஷ் நேற்று காலை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் கலாராணி, தொழில் நுட்ப அலுவலர் ஷாலினி, திமுக மாநகர அவைத்தலைவர் பன்னீர் செல்வம், மாநகர துணை செயலாளர் வேல்முருகன், திமுக நிர்வாகிகள் தன்ராஜ், தெய்வேந்திரன், ராணி, புஷ்பவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒழுகினசேரியில் மழை நீர் வடிகால் சீரமைக்கும் பணி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- மேயர்
- மகேஷ்
- ஓசுகினாசெரி
- நாகர்கோவில்
- ஒசுகினசேரி, நாகர்கோவில்
- மாவட்ட மைய நூலகம்
- ஓட்டுப்புரை தெரு, வார்டு 14
- நாகர்கோவில் மாநகராட்சி
