அரூர், டிச.23: அரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் இந்திராணி முன்னிலை வகித்தார். விழாவில், சம்பத்குமார் எம்எல்ஏ பங்கேற்று, 105 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் சக்திவேல், பழனிதுரை, முருகேசன், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
105 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
- அரூர்
- அரூர் அரசு
- மேல்நிலை
- பள்ளி
- தமிழ்நாடு அரசு
- தலைமை ஆசிரியர்
- ஆறுமுகம்
- நகராட்சி மன்றத் தலைவர்
- இந்திராணி
- சட்டமன்ற உறுப்பினர்
- சம்பத் குமார்
