- அன்புமணி
- எதிர்ப்பு
- சென்னை
- சட்டைவாரி
- சர்வே
- Bamaka
- ஆடமுக
- டிவேகா
- பாஜா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுகா
சென்னை: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி அன்புமணி தரப்பு சார்பில் பாமக நேற்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுதது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திமுகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் பாமக தரப்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தவெக நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து வழக்கறிஞர் பாலு தலைமையில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். இதனால், சென்னையில் நேற்று நடைபெற்ற பாமக ஆர்ப்பாட்டத்தில் மேற்கூறிய கட்சிகள் பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த கூட்டத்தில் பங்கேற்றால் அது கூட்டணிக்கு அச்சாரமாக அமையும் என்றும் கருதப்பட்டது.
இந்நிலையில், சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று பாமக சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி தலைமை வகித்தார். பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஷ்வரன், வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட பாமகவினர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பாஜ சார்பில் கரு.நாகராஜன், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் என்.ஆர். தனபாலன், புரட்சி பாரதம் கட்சியின் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, அமமுகவின் செந்தமிழன், சி.ஆர்.சரஸ்வதி, நாம் தமிழர் கட்சி சார்பில் களஞ்சியம் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்த முக்கிய கட்சிகள் இதில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதான முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது.
மேலும் அன்புமணி நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தும் சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தைலாபுரத்தில் பாமக நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தினார். பாமக விவகாரம் பற்றி எரிந்து வரும் சூழலில் அன்புமணி ஆர்ப்பாட்டம் நடத்தும் நாளிலேயே ராமதாஸ் ஆலோசனை நடத்தியது பாமகவில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* போராட்டத்துக்கும், தேர்தலுக்கும் சம்பந்தமும் கிடையாது- அன்புமணி
ஆர்ப்பாட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: இந்த போராட்டத்திற்கும், தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அனைத்து சமுதாய மக்களும் சுயமரியாதையோடு வாழ சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம். இதனால், அதிகமாக பயன்படப் போவது பட்டியல் சமுதாய மக்கள் தான். இவ்வாறு அவர் பேசினார்.
