×

10,000 வாக்குச்சாவடிகளில் இருந்து 1.50 லட்சம் மகளிர் திரளும் வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு: பல்லடத்தில் 29ம்தேதி நடக்கிறது; முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: திமுக மேற்கு மண்டலப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியில் வரும் 29ம்தேதி அன்று, ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மேற்கு மண்டல மாநாடு நடத்திட வாய்ப்பளித்த, திமுக தலைவரும், தமிழக முதல்வருக்கும், தமிழக துணை முதல்வருக்கும், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழிக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மேற்கு மண்டலத்தில் 35 தொகுதிகளில் உள்ள 10,000 வாக்குச்சாவடிகளில், வாக்குச்சாவடிக்கு 15 மகளிர் என ஒன்றரை லட்சம் மகளிர் திரளும் பிரமாண்ட மாநாடாக நடத்துவோம். 1.31 கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம், கல்வி கற்கும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான தோழி விடுதி, இந்தியாவிலேயே அதிக அளவாக 43 சதவீதம் வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கான சூழல் என மகளிர் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியான திட்டங்களை வகுத்துத் தரும் திமுக தலைவரை மீண்டும் அரியணையில் அமர்த்துவோம்.வெற்றிக்கணக்கு மேற்கிலிருந்து உதயமாகட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Vellum Tamil Women's Conference ,Palladam ,Former Minister ,Senthil Balaji ,Chennai ,DMK West Zone ,DMK ,President ,Tamil ,Nadu ,Chief Minister ,Vellum Tamil Women' West Zone Conference ,29th ,Tiruppur district ,
× RELATED திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி...