×

ராமதாஸ் தலைமையில் பாமக மாநில நிர்வாக குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை..!

விழுப்புரம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி தனி கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும். பாமக கட்சி பெயரையோ அல்லது எனது பெயரையோ பயன்படுத்தக் கூடாது. எனது இன்ஷியலை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என தொடர்ந்து பேசி வருகிறார். இந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் சேலம் தலைவாசலில் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது.

இதற்கு முன்னோட்டமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ராமதாஸ் உட்பட 22 பேர் கலந்து கொண்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பாமக செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீ காந்தி, அருள் எம்.எல்.ஏ.,பொதுச் செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையத் மன்சூர் அலி, முன்னாள் எம்.பி. துரை, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாநில நிர்வாகி பரந்தாமன் உள்ளிட்ட 22 நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி தொடர்ந்து பாமகபெயரையும், டாக்டர் ராமதாஸ் பெயரை பயன்படுத்தி வருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், வருகிற தேர்தலில் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? அல்லது மாநில கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் புதிய கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? என டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Pamaka State Executive Committee ,Ramadas ,Viluppuram ,Pamaka ,Dr ,Anbumani ,
× RELATED திருத்தணி அருகே பள்ளியில் சுவர்...